Sports
55 ஆண்டுகளுக்கு பிறகு நாக் அவுட் சுற்றில் தோற்ற ஜெர்மனி - கதறி அழுத சிறுமிக்கு ₹29 லட்சம் நிதி!
யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன் போட்டி இங்கிலாந்து நடைபெற்று வருகிறது. அதில் கடந்த ஜூன் 29ம் தேதி சொந்த மண்ணில் ஜெர்மனி அணியுடன் மோதியது இங்கிலாந்து.
அந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி கால் இறுதிக்குள் நுழைந்தது. கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனியை நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து வீழ்த்தியது ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியது.
இப்படி இருக்கையில், ஜெர்மனி அணியின் போட்டியைக் காண வந்திருந்த அந்நாட்டைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தன் சொந்த நாட்டு அணி தோற்றதை கண்டு மைதானத்தில் கதறி அழுதிருக்கிறார். இது அரங்கத்தின் திரைகளிலும் ஒளிப்பரப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜெர்மனியின் தோல்விக்காக சிறுமி அழுதது இணையத்திலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து கால்பந்து ரசிகரகளிடையே சிறுமியின் செயலுக்கு எதிர்ப்பு ஆதரவும் எழுந்தது.
அதன் பின்னர், இங்கிலாந்தை சேர்ந்த ஜோயல் ஹுயுக்ஸ் என்ற நபர் ஜெர்மனி சிறுமிக்கு ஆதரவாக ஆன்லைனில் நிதி திரட்டியிருக்கிறார். அதில் 28,500 பவுண்ட்கள் (₹29 லட்சம்) திரட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இங்கிலாந்தில் உள்ள அனைவருமே அந்த சிறுமிக்கு எதிரானவர்கள் அல்ல என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“உங்கள் நிறுவனங்களை தமிழ்நாட்டில் Invest செய்ய Motivate செய்யுங்கள்!” - முதலமைச்சர் கோரிக்கை!
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !