Sports
“குட்பை” - சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி, ரெய்னா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் மகேந்திர சிங் தோனி, கடந்த 2014ம் ஆண்டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். அதன்பின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார்.
தோனி கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையின் அரையிறுதியில் ஜூலை 9ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடி 50 ரன்களில் ரன்-அவுட் ஆனார். இதுதான் இவர் கடைசியாக விளையாடிய சர்வதேச போட்டி.
அதன்பின் இந்திய அணியில் இருந்து தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம் என்று செய்திகள் வெளிவந்தன. கொரோனா காரணமாக கடந்த 6 மாதங்களாக எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாத சூழலில் திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த இந்திய அணியின் கேப்டன் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், சென்னைக்கு வந்துள்ள சூழலில் தனது ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார் தோனி.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு அறிவித்ததையடுத்து, சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரெய்னா, 2018ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியதே அவரது கடைசி சர்வதேச போட்டியாகும்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!