Sports

“ஊரடங்கு காலத்தில் என்ன செய்கிறேன்?” - பிறந்தநாளை முன்னிட்டு மனம் திறந்த சச்சின்! #HBDSachin

ஊரடங்கு காலத்தில்தான் தனது தாயாருடன் நிறைய நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக ‘மாஸ்டர் ப்ளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் தனது 47 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட்டுக்கு உலகளவில் பல பெருமைகளைத் தேடித் தந்துள்ள சச்சினுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் சச்சின் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது தாயிடம் ஆசி பெற்றுள்ளார். இதுகுறித்து சச்சின் வெளியிட்டுள்ள பதிவில், “இன்றைய நாளை எனது அம்மாவிடம் ஆசி பெற்றுத் துவங்கியுள்ளேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிறந்தநாளையொட்டி தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சச்சின் டெண்டுல்கர், “ஊரடங்கு காலத்தில்தான் என் அம்மாவுடன் நிறைய நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஊரடங்கு நாட்களில் கேம்ஸ் விளையாடுவது, இசை கேட்பது, திரைப்படங்களைப் பார்ப்பது தான் பொழுதுபோக்கு.

1970களில் தொடங்கி இப்போது வந்திருக்கும் இசை வரை கேட்பேன். என் பிள்ளைகளே நான் கேட்கும் பாடல்களை முடிவு செய்கிறார்கள். என் ரசனையை அவர்களும், அவர்களின் ரசனையை நானும் புரிந்துகொள்ள முடிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மருத்துவ பணியாளர்களை கௌரவிக்க சச்சின் எடுத்த திடீர் முடிவு” - ரசிகர்கள் வரவேற்பு ! #CoronaWarriors