Sports
“எப்போது ஓய்வு?” - கேப்டன் விராட் கோலி ‘நச்’ பதில்!
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் வரும் 21ஆம் தேதி வெலிங்டன் மைதானத்தில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி.
அப்போது, 2008ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக, தான் கிரிக்கெட் களத்தில் விளையாடி வருவதாகவும், ஆண்டுக்கு 300 நாட்கள் கிரிக்கெட்டுக்காக ஒதுக்கி கடின உழைப்புடன் விளையாடி வருவதாகவும் கூறினார்.
அடுத்த 3 ஆண்டுகளுக்கு தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தற்போது இருக்கும் இதே உத்வேகத்துடன் தன்னால் திறம்பட விளையாட முடியும் என்று பேசிய கோலி, அடுத்த 3 ஆண்டுகளில் வரவுள்ள இரண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாட அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகரித்துள்ளதாகவும் கூறினார். அனைத்து அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டியில் விளையாடும் ஆர்வத்தில் உள்ளது என பேசிய கோலி, இந்திய அணியினர் சிறப்பான ஆட்டத்தால் கோப்பையை வெல்ல முயற்சிப்போம் என விராட் கோலி பேசினார்.
இதற்கிடையே, கிரிக்கெட்டில் அவரது எதிர்காலம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, இதுவரை ஓய்வு குறித்து எதுவும் யோசிக்கவில்லை. தேவைப்பட்டால் என்னுடைய 34 அல்லது 35வது வயதில் கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவேன். அதுவும் என் உடல் பலவீனம் அடைந்துவிட்டது என உணர்ந்தால் மட்டுமே எனத் தெரிவித்துள்ளார்.
31 வயதான கேப்டன் விராட் கோலி, இதுவரை 84 டெஸ்ட், 248 ஒருநாள் மற்றும் 81 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 21,863 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: ''சும்மா தோனி தோனின்னு கத்தாதீங்க'' : பிரஸ்மீட்டில் கொந்தளித்த விராட் கோலி - காரணம் என்ன?
கிட்டத்தட்ட ஜாம்பவான் சச்சினுக்கு நிகராக பேசப்படும் ரன் மெஷின் கோலி, அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து இதுவரை 70 சதம் அடித்துள்ளார். விராட் கோலி ஓய்வு பெறுவதற்குள், சதத்தில் சதம் கண்ட நாயகன் சச்சினின் சாதனையை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே இருக்கின்றது.
Also Read
-
🔴|2026 சட்டமன்றத் தேர்தல்: உடனுக்குடன் வாக்குப்பதிவு நிலவரம்!
-
”பரபரக்கும் களம்.. தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட ஆலோசனை”!
-
”வெற்றி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே! விழிப்புணர்வு அவசியம்”: கழகத்தினருக்கு முதலமைச்சர் மடல்!
-
அண்ணா மேம்பாலம் தொடங்கி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வரை.. சென்னையை வளப்படுத்திய திமுக!
-
மீண்டும் கழக ஆட்சி - மக்களின் எழுச்சியே சாட்சி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!