Sports
“இந்த முறை மிஸ் ஆகாது” : இமாலய சாதனை படைக்கக் காத்திருக்கும் ‘ஹிட் மேன்’ ரோஹித் சர்மா!
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இரு அணிகள் மோதும் முதல் T20 போட்டி ஐதராபாத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஒரு சிக்ஸர் அடிப்பதன் மூலம் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.
அப்படி ரோஹித் சர்மா ஒரு சிக்ஸர் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற மிகப்பெரிய சாதனையை அவர் படைப்பார். மேலும், 400 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் புரிவார்.
ரோஹித் சர்மா இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் 232 சிக்சர்கள், டெஸ்ட் போட்டிகளில் 52 சிக்சர்கள் மற்றும் டி20 போட்டியில் 115 சிக்சர்கள் என மொத்தம் 399 சிக்ஸர்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளனர்.
இப்பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த கிறிஸ் கெயில் 534 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், பாகிஸ்தான் வீரர் அப்ரிடி 476 சிக்ஸர்களுடன் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.
முன்னதாக வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரிலியே இச்சாதனையை ரோஹித் சர்மா படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அத்தொடரில் ரோஹித் சர்மா பெரிதளவில் சோபிக்கவில்லை. இந்நிலையில், நாளைய போட்டியில், இந்தச் சாதனையை படைப்பார் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !