Sports
INDVSBAN : ’இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு இவர்களே காரணம்’ : கோலி கைகாட்டும் சாம்பியன்கள் !
பகல் இரவு ஆட்டமாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 360 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
ஆட்டத்திற்கு பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தற்போது பந்து வீசுவதை பார்த்தால் அவர்கள் எந்த நாட்டிலும் எந்த மைதானத்திலும் விக்கெட்டுகளை எடுக்கும் திறமை உள்ளவர்களாக தெரிகின்றனர். சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.
அதேபோல் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகின்றனர். அதுவே எங்கள் அணியின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. இந்த தொடரின் வெற்றிக்கு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களே காரணமாக திகழ்ந்தனர்.
டெஸ்ட் போட்டியில் மன ரீதியான விஷயங்கள் நிறைய இருக்கும். இதனால், நீங்கள் ஆடுகளத்தில் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டி வரும். இதனை கங்குலி தலைமையிலான அணி தொடங்கியது. அதைத் தான் நாங்களும் தொடர்கிறோம்.
நான்கு ஆண்டுகளாக நாங்கள் செய்த கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசாக இந்த வெற்றியை நாங்கள் அனுபவிக்கின்றோம். மைதானம் நிறைய ரசிகர்கள் இருப்பது மிகச்சிறப்பானது. டெஸ்ட் போட்டிகள் உயிர் பெற்று வருகிறது என்பதற்கு இந்த ரசிகர்கள் கூட்டம் சரியான உதாரணம்'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!