Sports
புதிய சாதனை படைக்கவிருக்கும் ‘ஹிட்மேன்’... ரோஹித் சர்மாவுக்கு கைகொடுக்குமா இன்றைய போட்டி?
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது.
இதில் டெல்லியில் நடைபெற்ற முதல் T20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி லக்னோவில் இன்று நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றைப் படைக்க உள்ளார்.
இதுவரை ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் 232 சிக்சர்கள், டெஸ்ட் போட்டிகளில் 51 சிக்சர்கள் மற்றும் டி20 போட்டியில் 115 சிக்சர்கள் என மொத்தம் 398 சிக்சர்களை அடித்துள்ளார்.
இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2 சிக்ஸர் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்களை அடித்த மூன்றாவது வீரர் என்ற இமாலய சாதனை படைக்க உள்ளார்.
இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 400 சிக்சர்களை கடந்த வீரர்களாக பாகிஸ்தான் அணியின் ஷாகித் அப்ரிடி(476) மற்றும் மேற்கிந்திய தீவுகள் வீரர் கெயில் (534) ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!