Sports
ரிஷப் பண்ட் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைப்பார் - ரோஹித் சர்மா நம்பிக்கை!
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் வங்கதேச அணி விளையாடி வருகிறது.
இதில் டெல்லியில் நடைபெற்ற முதல் T20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி லக்னோவில் இன்று நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் குறித்து ஏராளமான விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து விமர்சிக்காமல் அவரை தனிமையாக சுதந்திரமாக விளையாட விடுங்கள் என ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து கூறிய ரோஹித் சர்மா, ''பண்ட்டுக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு. பண்ட் குறித்த கருத்துக்கள் தினமும் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு பதிலாக நான் கூற விரும்புவது ஒன்றே ஒன்றுதான் அவரை விமர்சிக்காமல் அவரை தனிமையாக சுதந்திரமாக விளையாட விடுங்கள். அவர் ஒரு திறமை வாய்ந்த வீரர் நிச்சயம் அவர் சாதிப்பார்.
அவரின் குறையை எடுத்துக் கூறுவதை நிறுத்தினால் தான் அவர் சிறப்பாக விளையாடுவார். மேலும் அவர் தனது திறமையை வெளிக் கொணர்ந்து அவரின் தனி அடையாளத்தை அளிக்க காத்திருக்கிறார். இந்த சமயத்தில் அவரை விமர்சிப்பது அவரின் ஆட்டத்தை பாதிக்கும். எனவே அவரை அவரது ஸ்டைலில் விளையாட விடுங்கள் நிச்சயம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைப்பார்'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!