Sports
INDVSBAN : கோலி மற்றும் தோனியின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைக்கப்பபோகும் ரோஹித் சர்மா!
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் வங்கதேச அணி விளையாட உள்ளது. இதில் முதல் T20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.
டெல்லியில் காற்று மாசு பிரச்னை தீவிரமாக உள்ள நிலையில் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், முதல் T20 போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்று கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் ரோஹித் சர்மா புதிய சாதனை படைக்க இருக்கிறார். அதாவது T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடத்தில் இருக்கிறார், விராத் கோலி. அவர் 67 போட்டிகளில் 2450 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
ரோஹித் சர்மா 90 போட்டிகளில் விளையாடி 2443 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். நாளை நடக்கும் போட்டியில் ரோகித் சர்மா 7 ரன்கள் எடுத்தால், அவர், T20 போட்டிகளில் சர்வதேச அளவில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் ரோஹித் சர்மா நாளைய போட்டியில் களமிறங்குவதன் மூலம் சர்வதேச T20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் களமிறங்கிய வீரர் என்ற சாதனையை படைக்கவுள்ளார்.
ரோஹித் சர்மாவும் தோனியும் தலா 98 போட்டிகள் ஆடியுள்ளனர். மேலும், உலகளவில் அதிக சர்வதேச T20 போட்டிகள் விளையாடியவர்கள் பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளார். இவருக்கு முன்னதாக பாகிஸ்தானை சேர்ந்த சோயிப் மாலிக் 115 போட்டிகளும், அப்ரிடி 99 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.
நாளை இரவு 07.00 மணிக்கு தொடங்கவுள்ள இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டாரில் காணலாம்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!