Sports
பிசிசிஐ புதிய தலைவராக ‘தாதா’ கங்குலி தேர்வாக வாய்ப்பு! - அமித்ஷா மகனுக்கும் முக்கிய பதவி?
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது எழுந்த புகார் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்திய கிரிக்கெட் வாரியத்தை சீரமைக்க, நீதிபதி லோதா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
பின்னர், லோதா குழு பரிந்துரைப்படி, மாநில கிரிக்கெட் சங்கங்களின் தேர்தல் முடிவடைந்த நிலையில், பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு 23-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலியை பிசிசிஐ தலைவர் பதவிக்கு முன்னிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா செயலாளர் பதவிக்கும், முன்னாள் தலைவரும் மத்திய நிதித்துறை இணை அமைச்சருமான அனுராக் தாகூரின் சகோதரருமான அருண் துமால் பொருளாளர் பதவிக்கும் முன்னிறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த மூன்று முக்கியமான பதவிகளுக்கும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யமாட்டார்கள் என்றும், ஸ்ரீநிவாசன் முன்னிறுத்திய பிரிஜேஷ் பட்டேல், ஐபிஎல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!