Sports
விரைவில் ஓய்வை அறிவிக்கப்போகும் இந்திய அணியின் முன்னணி வீரர்! - காரணம் இதுதான்!
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் வருகையால் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
இருபது ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் இவர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் 417 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவர் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ள தி ஹண்ட்ரெட் போட்டிக்கு ஹர்பஜன் சிங் பதிவு செய்துள்ளார். தி ஹண்ட்ரெட் போட்டியில் தன்னுடைய அடிப்படை விலையாக 1 லட்சம் பவுண்டுகளை (இந்திய மதிப்பில் ரூபாய் 87 லட்சம்) நிர்ணயித்துள்ளார் ஹர்பஜன் சிங்.
பி.சி.சி.ஐ விதிமுறைகளின்படி ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே வெளிநாட்டுப் போட்டிகளில் விளையாட முடியும். இதனால் ஹர்பஜன் சிங் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வரும் 20ம் தேதிக்குள் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற யுவராஜ் சிங், கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 லீக் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அதிமுக MLA-களை Whole Sale-ல் வாங்கும் தவெக.. திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!
-
பல்லிளிக்கும் தவெக அரசு.. அமைச்சர் நிர்மல்குமார் நிகழ்வில் மின் தடை.. அமைச்சர், மின்துறை இரட்டை விளக்கம்!
-
“நீங்கள் Failed ஹீரோ, Failed முதலமைச்சர்” : விஜய் பேச்சுக்கு தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் பதிலடி!
-
ஆய்வு, ஆராய்ச்சி என்ற பெயரால் படுகுழிக்கு பல்லாக்கு தூக்குவதா? : முரசொலி தலையங்கம் சாடல்!
-
“பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்... தரம் தாழ்ந்து பேசுவதா?”: சிஎம் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!