Sports
பி.சி.சி.ஐ-யிடம் மன்னிப்புக் கோரிய தினேஷ் கார்த்திக் - முடிவுக்கு வருகிறது பிரச்னை
மேற்கிந்திய தீவுகள் நாட்டில் கரீபியன் பிரிமியர் லீக் T20 தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரின் துவக்க விழாவில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கலந்து கொண்டு நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் சீருடையை அணிந்து அணி ஓய்வறையில் அமர்ந்திருந்த படம் இணையத்தில் வலம் வந்தன.
இதனையடுத்து, உரிய அனுமதி பெறாமல் வெளிநாட்டில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்டது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி அவருக்கு பி.சி.சி.ஐ நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், பி.சி.சி.ஐ அனுப்பிய நோட்டிஸிற்கு தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார்.
அதில், ''கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் தான் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கும் பயிற்சியாளர். கொல்கத்தா அணி குறித்து ஆலோசனை நடத்தலாம் என மெக்கல்லம் அழைப்பின் பேரிலியே அங்கு சென்றேன். அங்கு நடைபெற்ற எந்த போட்டியிலும் நான் பங்கேற்கவில்லை. பி.சி.சி.ஐ அனுமதி பெறாமல் அங்கு சென்றது தவறு தான். அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பை பி.சி.சி.ஐ-யின் நிர்வாக கமிட்டி ஏற்றுக்கொண்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்க படுகிறது.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!