Sports
தமிழக பாடிபில்டிங் வீரருக்கு அர்ஜுனா விருது - ஜடேஜா, பஜ்ரங் பூனியா உள்பட மேலும் பலருக்கு விருதுகள் !
விளையாட்டு துறையில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பில் அர்ஜூனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பாண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். பாராலிம்பிக் தடகள போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை தீபா மாலிக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை தொடரில் இக்கட்டான சூழ்நிலையில், ரன் குவித்து இந்திய அணியை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற வைத்ததற்கு ஜடேஜா இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த பாடி பில்டிங் வீரர் எஸ். பாஸ்கரன், மகளிர் கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ், தடகளத்தில் தஜிந்தர் பால் சிங், மொகமது அனாஸ், ஸ்வப்னா பர்மான், கால்பந்து வீரர் குர்ப்ரீத் சிங் சந்து, ஹாக்கி வீரர் சிங்லசனா சிங், துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை அஞ்சும் முட்கில், கபடி வீரர் அஜய் தாகூர் உள்ளிட்ட 19 வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.
அதுபோல், சிறந்த பயிற்சியாளருக்கு வழங்கப்படும் துரோணாச்சார்யா விருது பேட்மிண்டன் பயிற்சியாளர் விமல் குமார், டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் சந்தீப் குப்தா, தடகள பயிற்சியாளர் மொஹிந்தர் சிங் தில்லோன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
விருதுக்கு தேர்வாகியுள்ள அனைவருக்கும் வருகிற ஆக.,29ம் தேதி டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்குகிறார்.
கேல் ரத்னா விருது பெறுவோருக்கு 7.5 லட்சம் பரிசுத்தொகையும், அர்ஜூனா விருது, துரோணாச்சாரியா விருது பெறுவோருக்கு 5 லட்சம் பரிசுத்தொகையுடன் விருதும் வழங்கப்படவுள்ளது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!