Sports
‘அடுத்த சச்சின்’ எனக் கொண்டாடப்பட்ட இந்திய வீரருக்கு 8 மாதங்கள் தடை... மீண்டு வந்து சாதிப்பாரா?
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பிரத்வி ஷாவுக்கு சையத் முஷ்டாக் தொடரில் விளையாடுவதற்காக பிப்ரவரி மாதம் இந்தூரில் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், தடை செய்யப்பட்ட ஊக்கமூட்டும் தன்மையுடைய இருமல் மருந்தினை பிரித்வி ஷா உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக ஜூலை 16ம் தேதி அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், பிரித்வி ஷா இந்திய அணியில் விளையாட மார்ச் 16ம் தேதி முதல் நவம்பர் 15ம்தேதி வரை தடைவிதித்துள்ளது பிசிசிஐ.
மும்பையைச் சேர்ந்த இளம் வீரரான பிரித்வி ஷா இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வார் எனப் பலராலும் பாராட்டப்பட்டவர். சர்வதேச போட்டிகளைப் பொறுத்தவரை 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 237 ரன்கள் எடுத்துள்ளார்.
பிரித்வி ஷா 2016-2017 ரஞ்சி டிராபி அரையிறுதிப் போட்டி மூலம் ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆட்டத்தில் அறிமுகமானார். அந்தப் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.
2018ம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பிரித்வி ஷா இந்திய அணியின் கேப்டனாகவும், சிறந்த பேட்ஸ்மேனாகவும் அசத்தி, கோப்பையைப் பெற்றுத் தந்தார்.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணிக்கு மேலும் ஒரு சூப்பர் ஸ்டார் கிடைத்ததாக கூறினார். சச்சின், லாரா ஆகியோரின் கலவை பிரித்வி ஷா எனச் சொன்னார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாக்.
நல்ல எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா எதிர்பாராவிதமாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி விளையாட தடை பெற்றுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தடைக்காலத்துக்குப் பின்னர் பிரித்வி ஷா, மீண்டும் சிறப்பாக தனது கிரிக்கெட் அத்தியாயத்தைத் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
வாடகை வீட்டில் பெண்களுக்கு Scan.. கருவின் பாலினம் குறித்து கூறி வந்த பெண் உள்பட 3 பேர் சேலத்தில் கைது!
-
தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு அறிவிப்பு!
-
“சிகிச்சை அளிக்க மறுத்தால் நடவடிக்கை” : தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
-
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் : ரூ4.12 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் - முதலமைச்சர் அசத்தல்!
-
“கலைஞரை ரோல்மாடலாக எடுத்து செயல்பட வேண்டும்” : மாற்றுத்திறனாளிகள் விழாவில் முதலமைச்சர் பேச்சு !