Sports
‘அவரால் இரண்டு முறை உலகக் கோப்பை தவறவிட்டோம்’ - ரவி சாஸ்திரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ராபின் சிங்
உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் தொடரை இந்தியாதான் நிச்சயம் வெல்லும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரோடு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், துணைப் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்தன. இதையடுத்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு புதிதாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்தது.
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார். அதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங்கும் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து உள்ளார்.
இதுகுறித்து தனியார் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த ராபின் சிங், “ பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் தலைமை கீழ் இந்திய அணி இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் அரையிறுதி போட்டியுடன் வெளியேறியது அதேபோல T-20 உலகக்கோப்பை தொடரிலும் அரையிறுதியுடன் வெளியேறி இருக்கிறது.
எனவே இந்த தோல்விகளை எண்ணி பி.சி.சி.ஐ நடவடிக்கை எடுக்கும் என எதிர்ப்பார்க்கிறேன். 2023 உலககோப்பைக்கு தயாராவதற்கு ஒரு மாற்றத்தை கொண்டுவருவது இந்திய அணிக்கு நன்மை தரும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவிசாஸ்திரியை நீக்க வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!