Sports
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்? : தேடுதல் வேட்டையில் பி.சி.சி.ஐ!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரோடு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், துணைப் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. அவர்களின் பதவிக்காலம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயிற்சியாளர் பதவிக்கு விரும்புவோருக்கான விண்ணப்பத்தை பி.சி.சி.ஐ இன்று வெளியிட்டுள்ளது. தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்கள், பிசியோதெராபிஸ்ட் உள்ளிட்ட இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. அதில் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி ‘‘தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் ஐ.சி.சி-யின் அசோசியேட் மெம்பர் அணி, ஏ அணி, ஐ.பி.எல் ஆகியவற்றில் ஏதாவது ஒரு அணியில் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
அவர்கள் 60 வயதை தாண்டியிருக்கக் கூடாது. 30 டெஸ்ட் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர்கள் 10 டெஸ்ட் அல்லது 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தால் போதுமானது.
தற்போது உள்ள பயிற்சியாளர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் போதுமானது. அவர்கள் தொடக்க நிலை தேர்வு நடத்தப்படாமல் நேரடியாக தேர்வுக்கான பட்டியலில் இடம் பிடிப்பார்கள். ஜூலை 30-ந்தேதி வரை விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது ’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி செப்டம்பர் 15ம் தேதி தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் ஆடவுள்ளது. அதற்கு முன்னதாகவே இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!