Sports
எதிரணி யாராக இருந்தாலும் அதைக் கண்டு எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை : மாஸ் காட்டும் கோலி
உலகக்கோப்பை போட்டியில் 44வது லீக் போட்டி இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 4வது ஓவரிலேயே பும்ராவின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் இலங்கை வீரர் கருண ரத்னே. இவரை தொடர்ந்து பெரேரா 10, பெர்னாண்டோ 20, மென்டிஸ் 3 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததனர்.
இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணிக்கு 265 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சேஸிங் செய்த இந்திய அணியின் அபாரமான பேட்டிங்கால் இலங்கை அணி வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்தனர். தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட ரோஹித்தும், கே.எல்.ராகுலும் சதம் விளாசினர்.
இறுதியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி இலக்கை அடைந்து வெற்றியை பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது இந்திய அணி.
பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி, “இந்திய அணி வீரர்கள் திறம்பட விளையாடி வருகின்றனர். இனி வரும் அனைத்து போட்டிகளிலுமே சிறப்பாக எங்களது ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என்றார்.
மேலும், “எந்த அணியாக இருந்தாலும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் போட்டியில் பங்கேற்போம். புள்ளி பட்டியலில் இடம்பெற்றதை அடிப்படையாகக் கொண்டு எதிரணியை எடை போடமாட்டொம். யாரை வேண்டுமானாலும் வீழ்த்தலாம்.
அது அவ்வப்போது நடைபெறும் ஆட்டத்தை பொறுத்தது. எதிரணியை கண்டு என்றும் பயம் கொண்டதில்லை” என விராட் கோலி பேசியுள்ளார்.
Also Read
-
“41 பேர் உயிரி*ந்தபோது ‘மனசாட்சி’ இல்லாமல் ஓடிச்சென்ற நாள் இன்று!” : மதுராந்தகத்தில் உதயநிதி பேச்சு!
-
அரசாணை வெளியிடுவது.. திரும்பப் பெறுவது.. repeat! : த.வெ.க அரசுக்கு எழும் கண்டனங்கள்!
-
16 ஆண்டுகளாக வழங்கிவந்த ‘முட்டைகள்’ தவெக ஆட்சியில் நிறுத்தம்! - முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!
-
சட்டம், ஒழுங்கு தகவல்கள் RTI கீழ் விலக்கு.. கடும் எதிர்ப்பு கிளம்பியதும் U-Turn அடித்த தவெக அரசு!
-
“அதிமுக MLA-களை Whole Sale-ல் வாங்கும் தவெக.. திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!