Sports
உலகக்கோப்பை கிரிக்கெட் 2019: ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2019ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இதுவரை 4 ஆட்டங்களில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது தனது, ஐந்தாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுடனான போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டம் மட்டும் மழையால் ரத்து செய்யப்பட்டது.
பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் இந்திய அணி வலுவான அணியாக உள்ளது. இன்றைய லீக் போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமாருக்கு பதில் முகமது ஷமி விளையாடவுள்ளார். இதுவரை போட்டியிட்ட 5 ஆட்டங்களிலும் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்திருக்கிறது.
இதனால் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத ஆப்கானிஸ்தான் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!