Sports
நடப்பு சாம்பியன் Vs முன்னாள் சாம்பியன் : உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவை சந்திக்கும் இந்தியா!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.
முன்னதாக, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்ஆப்ரிக்க அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி கணக்கைத் துவக்கியது. ஆரோன் ஃபின்ச் ஆஸ்திரேலிய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானையும், அடுத்த ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியையும் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது.
உலக கோப்பையை இதுவரை ஐந்து முறை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி இந்த முறையும் அசுர பலத்துடன் காட்சியளிக்கிறது. வேகப்பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் வலுவாக விளங்கும் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு நிச்சயம் சோதனை அளிக்கும்.
ஓவல் மைதானத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். இந்த பிட்ச் பேட்டிங்கிற்கும் கைகொடுக்கும் என்பதால் அதிக ரன்கள் குவிக்கப்பட வாய்ப்புள்ளது. வானிலையைப் பொறுத்தவரை பிற்பகலில் லேசாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மற்ற நேரங்களில் வெயில் அடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
இந்தியாவிலேயே முதல்முறை... மின்னணு விளையாட்டு போட்டிகளை நடத்தி அசத்திய தமிழ்நாடு அரசு !
-
பாலஸ்தீன முக்கிய தலைவரை விடுவிக்க மறுத்த இஸ்ரேல்... யார் இந்த மர்வான் பர்ஹாட்டி !
-
“கலை என்பது சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
இந்தியாவிலேயே முதல்முறை... சர்வதேச தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: திறந்து வைத்தார் முதல்வர்!
-
“ஜி.டி.நாயுடுவை யாரும் நாயுடுவாக பார்க்கவில்லை...” - விமர்சனங்களுக்கு கி.வீரமணி பதிலடி!