Sports
இன்று தொடங்குகிறது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா : கோப்பையை வெல்ல போவது யார் ?
12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடக்கிறது. கிரிக்கெட் விளையாட்டின் மிகப்பெரிய தொடராக கருதப்படும் உலகக்கோப்பை தொடர் இன்று (30ம் தேதி) தொடங்கி ஜூலை மாதம் 14ம் தேதி வரை நடக்கிறது.46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த முறை போட்டி அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். ‘லீக் சுற்று’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும். ‘லீக்சுற்று ’ போட்டிகள் ஜூலை 6ம் தேதியுடன் முடிகிறது. முதல் அரையிறுதி ஜூலை 9ம் தேதியும், 2-வது அரைஇறுதி ஜூலை 11ம் தேதியும், இறுதிப் போட்டி ஜூலை 14ம் தேதியும் நடக்கிறது.
இன்று நடைபெறும் உலகக்கோப்பையில் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.இரு அணியும் சமபலம் பொருந்தியவை என்பதால் உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டமே மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை நடைபெற்ற 11 உலகக்கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா 5 முறையும், வெஸ்ட்இண்டீஸ், இந்தியா அணிகள் தலா 2 தடவையும், பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 1 முறையும் உலகக்கோப்பையை வென்றுள்ளன. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் இதுவரை உள்கோப்பையை வென்றதில்லை.
இந்திய அணி 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2011ம் ஆண்டு டோனி தலைமையிலும் உலகக்கோப்பையை கைப்பற்றியது. விராட் கோலி தலைமையில் தற்போது 3ம் முறையாக உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை ஜூன் 5ம் தேதி எதிர்கொள்கிறது.
Also Read
-
“இந்த மசோதாவால் நாடாளுமன்ற ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படும்” - பாஜக அரசுக்கு திருமாவளவன் கண்டனம்!
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!