Sports
இந்திய அணி வலுவாக உள்ளது - இந்திய அணி கேப்டன் விராட் கோலி நம்பிக்கை !
உலகக் கோப்பை தொடர் மே 30-ம்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை ஜூன் 5ம் தேதி எதிர்கொள்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அனைத்து தரப்பிலும் வலுவாக இருப்பதால் நமக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என நம்பப்படுகிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி உள்ளிட்டோர் இந்திய அணிதான் கோப்பையை வெல்லும் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய அணி இன்றிரவு இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது.
இதற்கு முன்பாக கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். அப்போது பேசிய விராட் கோலி "இந்திய அணி வலுவாகவும் சமநிலையுடனும் உள்ளது. கோப்பையை வெல்வதற்கு இந்திய அணி அனைத்து விதமான திறமைகளையும் வெளிப்படுத்தும். முந்தைய தொடர்களை விட இந்த உலகக்கோப்பை தொடர் மிகவும் சவாலாக உள்ளது. எந்தவொரு சின்ன அணியும் சிறப்பான ஆடி எதிரணிக்கு அதிர்ச்சியை அளிக்கும் திறமை கொண்டிருக்கிறது. மைதானத்தின் தன்மையை, கள நிலவரத்தை இந்திய அணி விரைவில் உள்வாங்கி சிறப்பாக விளையாடும். ஐபிஎல்., தொடரில் பங்கேற்ற இந்திய அணி வீரர்கள் சூப்பர் பார்ம்ல் இருப்பது சாதகமான விஷயம். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான சகால், குல்தீப் ஆகியோர் இரு தூண்கள் போல. நெருக்கடியான தருணங்களை சிறப்பாக கையாள்வதே இத்தொடரின் மிகப்பெரிய சவால். இம்முறை நிச்சயமாக பல அதிக ஸ்கோர்கள் கொண்ட போட்டிகளை பார்க்க முடியும்." இவ்வாறு கூறினார்.
தென்னாப்பிரிக்காவுடன் ஜூன் 5-ம் தேதி மோதுவதற்கு முன்பாக மே 25-ம் தேதி நியூசிலாந்து உடனும், மே 28-ம்தேதி வங்க தேசத்துடனும் இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.
Also Read
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!
-
இளம் அரசு பணியாளர்கள் : 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் எதிர்காலம் இளம் அரசுப் பணியாளர்களிடம் தான் இருக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.5000 பஞ்சாமிர்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும் : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!