Sports
இதனால் தான் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது - விராட் கோஹ்லி விளக்கம்
12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரையில் இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டிக்காக 15 பேர் கொண்ட இந்திய அணி ஏப்ரல் 15ம் தேதி அறிவிக்கப்பட்டது . இதில் மாற்று விக்கெட் கீப்பர் தொடர்பாக கடும் விமர்சனம் எழுந்தது. இளம் வீரர் ரிஷப் பண்ட்க்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது தவறு என்று முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
அனுபவத்தின் அடிப்படையிலேயே தினேஷ் கார்த்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் விளக்கம் அளித்து இருந்தார்.
இந்நிலையில், உலக கோப்பை போட்டியில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன் என இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி விளக்கம் அளித்து உள்ளார்.
தினேஷ்கார்த்திக் உலக கோப்பைக்கான அணியில் தேர்வு செய்ததற்கு அவரது அனுபவமே முக்கிய காரணம். இந்த விஷயத்தை தேர்வு குழுவில் உள்ள அனைவரும் ஒப்புக் கொண்டனர். இதனால் தினேஷ் கார்த்திக்குக்கு இயல்பாகவே வாய்ப்பு வழங்கப்பட்டது.
தினேஷ் கார்த்திக்கு அனுபவம் இருக்கிறது. டோனிக்கு ஒருவேளை காயம் ஏற்பட்டு அவர் ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் தினேஷ் கார்த்திக்கால் கீப்பிங் பணியை சிறப்பாக கவனிக்க முடியும். மேலும் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யக்கூடிய சிறப்பான திறமையை பெற்றவர். இதன் அடிப்படையில் தான் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
33 வயதான தினேஷ் கார்த்திக் 2004 ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார்.இது அவர் கலந்துகொள்ளும் இரண்டாவது உலகக்கோப்பை ஆகும்.இதற்கு முன், 2007 உலககோப்பை அணியில் இடம் பெற்றார். ஆனால் ஒரு ஆட்டத்தில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
Also Read
-
"நாடாளுமன்றத்தில் தற்போது முறையான விவாதமே நடைபெறவில்லை" - கனிமொழி எம்.பி. விமர்சனம் !
-
ஆப்கானின் தாலிபான் அரசுக்கு அங்கீகாரம்... மூடப்பட்ட தூதரகத்தை மீண்டும் திறப்பதாக இந்தியா அறிவிப்பு !
-
“தாலிபானின் பிற்போக்குத்தனமான செயலை எப்படி அனுமதிக்கலாம்?” : ஒன்றிய அரசுக்கு, கனிமொழி MP கடும் கண்டனம்!
-
12,480 ஊராட்சிகள்.. 3 முக்கிய தேவைகளுக்கு உடனடி ஒப்புதல்: முதலமைச்சர் தலைமையில் கிராம சபைக் கூட்டம் !
-
“கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை” : கிராம சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!