Sports
சென்னை vs மும்பை #LIVE
சென்னை அணி பேட்டிங்!
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது தகுதி சுற்றுப் போட்டி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது சென்னை அணி. இந்த ஆட்டத்தில் கேதார் ஜாதவுக்கு பதிலாக முரளி விஜய் ஆடுகிறார். தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன், டுபிளெஸ்சிஸ் களமிறங்கினர்.
தகுதிச் சுற்றில் மோதும் சென்னை - மும்பை!
2019 ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்விகளைச் சந்தித்து முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்தது. இதுவரை பங்கேற்ற அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் லீக் சுற்றை தாண்டிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் 9 வெற்றி, 5 தோல்வியைச் சந்தித்து ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான தகுதிச் சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வியுறும் அணிக்கு வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் மோதும் வாய்ப்பு கிடைக்கும்.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!