Sports
இந்திய அணி இந்த முறை உலககோப்பையை வெல்லும் - முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் நம்பிக்கை!
சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்ரீகாந்த் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி சிறந்த முறையில் தயாராகி உள்ளது.
உலகக் கோப்பைக்கு முன்னதாக தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வீரர்களை எந்தவகையிலும் பாதிக்காது என்று கூறிய ஸ்ரீகாந்த், தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் அனைவரும் நல்ல உடற்தகுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர், இந்திய அணி இந்த முறை கோப்பையை வெல்லும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
Also Read
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!