Sports
உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு வந்த சிக்கல் !
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உலகக்கோப்பையில் விளையாட இந்திய அணி மே 22ஆம் தேதி ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் புறப்படுவதாக திட்டமிட்டிருந்தது. கடுமையான நிதிச்சுமை காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அண்மையில் சேவையை முழுமையாக நிறுத்திய நிலையில், வீரர்கள் இங்கிலாந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கு பதில் அளித்துள்ள ஏர்வேஸ் நிறுவனம், வீரர்கள் செல்வதில் ஏதும் தாமதம் ஏற்படாது என தெரிவித்துள்ளது. இந்திய அணி, முதல் பயிற்சி போட்டியில் நியூசிலாந்துடன் மே 25ஆம் தேதி விளையாடுகிறது.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!