Sports
தொடரும் கொல்கத்தாவின் தோல்வி !
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்றிரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்தீவ் பட்டேல், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். பார்தீவ் பட்டேல் 11 ரன்னிலும், அக்ஷ்தீப் நாத் 13 ரன்னிலும் அவுட்டாகினர்.விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த மொயீன் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொயீன் அலி 28 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 66 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
முதலில் நிதானமாக ஆடிய விராட் கோலி அரைசதம் கடந்ததும் அதிரடியில் இறங்கினார். கடைசி கட்டத்தில் சிக்சர், பவுண்டரியுமாக விளாசினார். விராட் கோலி 56 பந்தில் 4 சிச்கர், 9 பவுண்டரியுடன் சதமடித்து 100 ரன்னில் வெளியேறினார். இறுதியில், பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. கிறிஸ் லின், சுனில் நரேன் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.கிறிஸ் லின் ஒரு ரன்னில் அவுட்டானார். சுனில் நரேன் 18 ரன்னிலும், ஷுப்மான் கில், ராபின் உத்தப்பா ஆகியோர் 9 ரன்னிலும் அவுட்டாகினர்.
நிதிஷ் ரானாவுடன் ஆந்த்ரே ரசல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பெங்களூர் அணி பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. சிக்சர் மழையாக பொழிந்தது.நிதிஷ் ரானா சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். ஆந்த்ரே ரசல் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவர் 25 பந்தில் 65 ரன் குவித்து ஆட்டமிழந்தார். நிதிஷ் ரானா 46 பந்தில் 85 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
இறுதியில் கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பெங்களூர் அணி 10 ரன் வித்தியாசத்தில் வென்றது.விராட் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கொல்கத்தா அணி தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!