Sports
IPL 2019 : தொடர் தோல்வியிலிருந்து மீண்டெழுமா கொல்கத்தா அணி ?
ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.
கொல்கத்தா அணி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே பெங்களூர் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்ததால் மீண்டும் தோற்கடித்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. கொல்கத்தா அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோற்றது. அந்த தோல்வியில் இருந்து மீளுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்த்ரே ரஸ்சல், கிறிஸ் லின், நிதிஷ் ரானா போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், சுனில் நரீன், பியூஸ் சாவ்லா போன்ற சிறந்த பவுலர்களும் கொல்கத்தாவில் உள்ளனர்.
பெங்களூர் அணி 1 வெற்றி, 7 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை பெற அந்த அணிக்கு மிகவும் கடினமே. எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.
அந்த அணி பஞ்சாப்பை மட்டும் 8 விக்கெட்டில் வென்றது. மும்பையிடம் 2 முறையும் , சென்னை, ஐதராபாத் , ராஜஸ்தான், கொல்கத்தா , டெல்லி ஆகியவற்றிடம் ஒருமுறையும் தோற்றது. விராட்கோலி , டிவில்லியர்ஸ் , சாஹல் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தும் பெங்களூர் அணி முன்னேற்றம் அடையாமல் இருப்பது பரிதாபமே.
Also Read
-
பா.ஜ.க.வின் பெயரைப் பயன்படுத்த த.வெ.க அச்சப்படுவது ஏன்? - தொடரும் கள்ள மெளனம்!
-
மாணவர்களுக்கு இருக்கும் துணிச்சல்கூட இந்த 'டம்மி' முதல்வருக்கு இல்லை என்பது வெட்கக்கேடு : திமுக ஐடி விங்!
-
தூத்துக்குடி முத்துக்களுக்கான புவிசார் குறியீடு எப்போது? : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!
-
டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாணவர் அமைப்பினர் கைது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!
-
நீட் தேர்வின் ஆபத்தை முதன்முதலில் எச்சரித்தது தி.மு.க.தான் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!