Sports
IPL 2019 : பழைய தோல்விக்கு பழிதீர்க்குமா கொல்கத்தா அணி : டெல்லியுடன் மோதுகிறது
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் இரண்டு வாரத்துக்கு முன் இதே அணிகள் கடந்த முறை மோதிய போது சூப்பர் ஓவரில் டெல்லி அணியிடம் கொல்கத்தா அணி தோல்வியை சந்தித்தது.
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி பெற்று உள்ளது. அந்த அணியில் கிறிஸ் லின், உத்தப்பா, சுனில் நரைன், நிதிஷ் ராணா, ஆந்த்ரே ரஸல், குல்தீப் யாதவ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அதிரடி மன்னன் ரசல் அணிக்கு முதுகெலும்பாக உள்ளார். அவர் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடுவது அந்த அணிக்கு பலமாக உள்ளது.
ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி 6 ஆட்டத்தில் 3 வெற்றி 3 தோல்வி பெற்று உள்ளது. அந்த ணியில் ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரிஷப் பந்த், இங்க்ராம், கிறிஸ் மோரிஸ், அக்சார் பட்டேல், ரபாடா போன்ற வீரர்கள் உள்ளனர்.இந்த தொடரில் ஏற்கனவே கொல்கத்தாவை வீழ்த்தி உள்ளதால் டெல்லி நம்பிக்கையுடன் உள்ளது. கொல்கத்தாவுக்கு எதிராக டெல்லி முழு திறமையை வெளிப்படுத்தும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
Also Read
-
இந்தியாவிலேயே முதல்முறை... சர்வதேச தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: திறந்து வைத்தார் முதல்வர்!
-
“ஜி.டி.நாயுடுவை யாரும் நாயுடுவாக பார்க்கவில்லை...” - விமர்சனங்களுக்கு கி.வீரமணி பதிலடி!
-
"ஜி.டி.நாயுடு பெயர் முறையான வகையில் வைக்கப்பட்டுள்ளது"- அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் !
-
“தங்கத்தை விட கலைமாமணி விருதுக்குதான் மதிப்பு அதிகம்.. ஏனெனில்...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
"நாடாளுமன்றத்தில் தற்போது முறையான விவாதமே நடைபெறவில்லை" - கனிமொழி எம்.பி. விமர்சனம் !