Sports
சென்னை அணியிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்
ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் கடந்த 23 ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது.இதுவரை அனைத்து அணிகளும் போட்டிகளில் விளையாடி உள்ளது.
தோணி தலைமையிலான சென்னை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று இரண்டாமிடத்தில் உள்ளது.நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ,சென்னை அணியும் ராஜஸ்தான் அணியதுடன் மோதுகிறது.சென்னை வீரர்கள் இதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்,சென்னை அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி தனது சொந்த வேலை காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்து முழுவதும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதால் ,அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி விலகிய நிலையில் மற்றோரு வீரர் விலகியிருப்பது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் : எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?