Sports
ஐ.பி.எல் 2019; பஞ்சாப்புடன் மல்லுக்கட்டும் மும்பை
ஐ.பி.எல் தொடரின் 12வது சீசன் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இன்று (30.03.19) இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது மாலை 4 மணிக்கு மொஹாலியில் நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.இரு அணிகளும் தலா இரு போட்டிகளில் விளையாடி ஒன்றில் வென்றுள்ளது.
மும்பை அணி தனது கடைசி போட்டியில் பெங்களூரு அணியை கடைசி பந்தில் வெற்றி பெற்றது.எனவே இந்த போட்டியில் வெற்றியை தொடர மும்பை முனைப்பில் இருக்கும்.பஞ்சாபி அணி தனது கடைசி போட்டியில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்தது.மீண்டும் வெற்றிபி பாதைக்கு திரும்ப பஞ்சாப் முயற்சிக்கும்.எனவே,இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.இது வரை இரு அணிகளும் 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.அதில் 12 போட்டிகளில் மும்பை அணியும் 10 போட்டிகளில் வென்றுள்ளது.
இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் போட்டியில் டெல்லி அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.கொல்கத்தா விளையாடிய 2 ஆட்டங்களிலும் வென்று முதலிடத்தில் உள்ளது.டெல்லி அணி ஆடிய 2 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றியும்,ஒன்றில் தோல்வியும் சந்தித்துள்ளது.
Also Read
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்
-
“எவ்வளவு தைரியம் இருந்தா இங்க கொண்டாடுவீங்க..” -கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுத்து இந்துத்வ கும்பல் அடாவடி
-
“அணுசக்தி என்பது வணிகப் பொருள் அல்ல!” : ஒன்றிய அரசின் ‘சாந்தி’ மசோதாவைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!