Sports
டெல்லி அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறதுஇந்தத் தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றன.இதுவரை நான்கு போட்டிகள் நடந்துள்ளன.
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த 5-வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.அதன்படி,ஷிகர் தவானும் ப்ரித்வி ஷாவும் ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள்.
பிரித்வி ஷா 16 பந்தில் 5 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரிஷப் பந்த் இறங்கினார். ரிஷப் பந்த் 13 பந்துகளில் ஒரு சிக்சர், 2 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார்.தொடர்ந்து இறங்கிய கொலின் இங்கிராம் 2 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கீமோ பால் டக் அவுட்டானார்.
ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் ஷிகர் தவான் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அவர் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்தது.சென்னை அணி சார்பில் பிராவோ 3 விக்கெட்டும், சாஹர், தாஹிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. ராயுடு 5 ரன்னில் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் வெளியேறினார். வாட்சன் 26 பந்துகளில் 44 ரன்களும் ரெய்னா 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
டோனியும், கேதர் ஜாதவும் பொறுப்புடன் விளையாடினர். ஆட்டத்தின் கடைசி ஓவரில் கேதர் ஜாதவ், ரபாடா பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த பிராவோ தொடர்ந்து 2 பந்துகளின் ரன் எதும் எடுக்காமல் 3 ஆவது பந்தில் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இரண்டு போட்டிகளிலும் வென்றதை அடுத்து புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி முதலிடத்தில் உள்ளது.
Also Read
-
பாலஸ்தீன முக்கிய தலைவரை விடுவிக்க மறுத்த இஸ்ரேல்... யார் இந்த மர்வான் பர்ஹாட்டி !
-
“கலை என்பது சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
இந்தியாவிலேயே முதல்முறை... சர்வதேச தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: திறந்து வைத்தார் முதல்வர்!
-
“ஜி.டி.நாயுடுவை யாரும் நாயுடுவாக பார்க்கவில்லை...” - விமர்சனங்களுக்கு கி.வீரமணி பதிலடி!
-
"ஜி.டி.நாயுடு பெயர் முறையான வகையில் வைக்கப்பட்டுள்ளது"- அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் !