Sports
கடைசி ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி !!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றிய நிலையில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. அதனால், டெல்லியில் நாளை (மார்ச் 13) நடைபெறும் கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி இருக்கிறது.
கடைசி போட்டியைப் பொறுத்தவரை, கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட்-க்கு கடைசி வாய்ப்பாக இருக்கும். இதில், நன்றாக விளையாடினால் உலகக் கோப்பை வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் உலகக் கோப்பை கனவு கலைந்துவிடும்.அம்பதி ராயுடுக்கு போதுமான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் அவர் திரும்ப சேர்க்கப்பட வாய்ப்பில்லை. விஜய் சங்கர், கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட் ஆகியோர் மிடில் ஆர்டரில் இருப்பார்கள்.ரிஷப் பண்ட் வாய்ப்பை பயன்படுத்தினால் உலகக் கோப்பை அணியில் 2-வது விக்கெட் கீப்பராக இடம்பெறலாம்.பந்துவீச்சில் குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், பும்ரா கூட்டணி இருக்கும்.
இந்திய உத்தேச லெவன் அணி: ஷிகர் தவான், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், கேதர் ஜாதவ், விஜய் சங்கர், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா
Also Read
-
பாலஸ்தீன முக்கிய தலைவரை விடுவிக்க மறுத்த இஸ்ரேல்... யார் இந்த மர்வான் பர்ஹாட்டி !
-
“கலை என்பது சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
இந்தியாவிலேயே முதல்முறை... சர்வதேச தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: திறந்து வைத்தார் முதல்வர்!
-
“ஜி.டி.நாயுடுவை யாரும் நாயுடுவாக பார்க்கவில்லை...” - விமர்சனங்களுக்கு கி.வீரமணி பதிலடி!
-
"ஜி.டி.நாயுடு பெயர் முறையான வகையில் வைக்கப்பட்டுள்ளது"- அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் !