Politics
“முதலமைச்சர் விஜய் தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்?” : கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியர் முறையாக புகாரளித்தும் அதன் மீது தமிழ்நாடு தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்காதது சர்ச்சையாகியுள்ளது.
பெண் ஆட்சியரிடம் இருந்து புகார் எழுந்தபோது, பணியிடமாறுதலுக்கு பரிந்துரைத்த தலைமைச் செயலாளர், நடவடிக்கை எடுக்க முன்வராதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைக் கண்டித்து தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தெரிவித்ததாவது,
“பல ஊடகவியலாளர்களும் தெரிவிக்கும் இந்தத் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரிலிருந்து தலைமைச் செயலாளரின் பெயரை நீக்க முயற்சிகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலும், முதலமைச்சர் விஜய் தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்?
உயர்நீதிமன்றம் இக்குற்றச்சாட்டுகளையும் விசாரணைக்கு உட்படுத்தி, எவ்வித அரசியல் அழுத்தமோ, அதிகாரத் தலையீடோ இல்லாமல் காவல்துறை விசாரணை நடைபெறுவதை உறுதி செய்யும் என நம்புகிறேன்.”
Also Read
-
தொகுதி மறுவரையறையில் இதுதான் திமுக நிலைப்பாடு .. சமரசத்திற்கு இடமில்லை : மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
49-ஆவது பிறந்தநாள் : பேரறிஞர் அண்ணா - கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்!
-
மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா : நவ. 30-ல் கூடுகிறது நாடாளுமன்றம் - மகளிர் இடஒதுக்கீட்டில் அதிரடி!
-
ஊழல் சாம்ராஜ்ய முதலமைச்சர் விஜய்.. கிரிமினல் மாபியாதான் த.வெ.க. ஆட்சி : திமுக தலைமைக் கழகம் காட்டம்!
-
5 தொகுதியில் 2 தொகுதியில் மட்டுமே தேர்தல் நடத்த அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு என்ன?