Politics
ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க எம்.எல்.ஏ கைது! - 119 நாட்களுக்கு பிறகு நடவடிக்கை!
கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 119 நாட்களுக்கு முன்பே, இது குறித்து கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு தலைமைச் செயலாளரிடம் புகாரளித்த நிலையில், நடவடிக்கை எடுப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.
இதனைத் தொடர்ந்து நவ.9 அன்று தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, இச்செய்தியை பொதுவெளியில் வெளியிட்டு, கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர் கண்டனங்களை முன்வைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநரிடமே சென்று புகாரளித்தார்.
இத்தகைய தொடர் அழுத்தத்திற்கு பிறகு, இன்று (நவ.27) கள்ளக்குறிச்சியில் உள்ள தனது வீட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார் த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்.
Also Read
-
எதற்காகக் கல்தூணில் தீபம்? - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விடாப்பிடியாக இருக்கும் உச்சநீதிமன்றம்!
-
“முதலமைச்சர் விஜய் தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்?” : கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
தொகுதி மறுவரையறையில் இதுதான் திமுக நிலைப்பாடு .. சமரசத்திற்கு இடமில்லை : மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
49-ஆவது பிறந்தநாள் : பேரறிஞர் அண்ணா - கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்!
-
மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா : நவ. 30-ல் கூடுகிறது நாடாளுமன்றம் - மகளிர் இடஒதுக்கீட்டில் அதிரடி!