Politics
தவெக எம்.எல்.ஏ.வின் தகாத குறுஞ்செய்தி.. உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி - பதில் சொல்லுமா விஜய்யின் தவெக அரசு?
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா-வுக்கு த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசமான வாட்ஸ் அப் தகவல் அனுப்பியதாக எழுந்துள்ள புகார் விவகாரத்தில் த.வெ.க அரசு மவுனம் சாதிக்கும் நிலையில் இப்பிரச்னை அடுத்தடுத்தக் கட்டங்களை நோக்கி நகந்து கொண்டிருக்கிறது.
மதுரையில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிதிபதி எஸ்.விக்டோரியா கவுரி எழுப்பிய கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஆபாசமான தகவல் அனுப்பியதாக கூறப்படும் விவகாரத்தைச் சுட்டிக்காட்டிய அவர், ‘’உயர் பதவியில் இருப்பவர்களே பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொண்டால் சாதாரணப் பெண்களின் நிலையை என்னவென்று சொல்வது?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் அளித்தும் காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனையுடன் குறிப்பிட்டார். ’’பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்பது போதாது; புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்’’ என்று வலியுறுத்தினார்.
“கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு நடந்திருப்பது, பணி இடத்தில் பெண்களுக்கு எதிரான துண்புறுத்தல் இல்லையா? இப்பிரச்னையில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது’’ என்றும் கண்டித்துள்ளார்.
தேசிய மகளிர் ஆணையம் : இதற்கிடையில் தேசிய மகளிர் ஆணையம், நவம்பர் 11 ஆம் தேதி ‘தி நியூஸ் மினிட்” (The News Minute) என்ற ஊடகத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில், ‘’பாரபட்சமற்ற விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக காவல் துறை இயக்குநருக்கு நவம்பர் 15 ஆம் தேதி கடிதம் எழுதி இருந்தது.
‘’இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை (Action Taken Report – ATR) ஏழு நாட்களுக்குள் சமர்பிக்குமாறு தமிழக டி.ஜி.பி-யிடம் தேசிய மகளிர் ஆணையம் கேட்டிருந்தது. அந்த 7 நாள் கெடு, நவம்பர் 22 ஆம் தேதியோடு முடிந்துவிட்டது.
உயர்நீதிமன்ற பெண் நீதிபதி; தேசிய மகளிர் ஆணையம் கேள்வி எழுப்பியும் த.வெ.க அரசு மவுனம் காப்பது ஏன்?
Also Read
-
“கடந்த ஆண்டு 82.78% இருந்த தண்ணீர் இருப்பு... இன்று வெறும் 36.28% தான்!” : டி.ஆர்.பி.ராஜா கண்டனம்!
-
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒருங்கிணைப்புக் குழு... கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு!
-
அதிகாரிகள் முன்னிலையில் தவெக அமைச்சர்களின் அரசியல் தாக்குதல்.. ஆரோக்கியமான மரபா? : இ.பரந்தாமன் கேள்வி!
-
“டெல்டா விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத த.வெ.க அரசு” : 7 பேர் கொண்ட குழு அமைத்த தி.மு.க தலைவர்!
-
“ஜனநாயகன் படத்திற்கு நிதி பெற்றதால்தான் மௌனமாக இருக்கிறீர்களா?” - விஜய்க்கு அப்பாவு கேள்வி!