Politics
“முதலமைச்சருக்கு அரோகரா..? ஆணவத்தின் உச்சம்! அழிவு நிச்சயம்!” : கீதா ஜீவன் கண்டனம்!
திருச்செந்தூரில் முருகர் வழிபாட்டின்போது, “முதலமைச்சருக்கு அரோகரா... அமைச்சருக்கு அரோகரா” என அவமதிக்கும் வகையில் முழக்கமிட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதனைக் கண்டித்து தி.மு.க முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளருமான கீதா ஜீவன் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு,
“நேற்றைய தினத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூரில் கந்த சஷ்டியை முன்னிட்டு நடைபெற்ற சூரசம்ஹாரத்தில் தமிழ் கடவுளான முருகருக்கு, “அரோகரா, கந்தனுக்கு அரோகரா” என்றுதான் கோஷங்கள் எழுப்பப்படும். முருகருக்கு சரணம் என்ற அர்த்தத்தைக் கொள்ளக்கூடிய அரோகரா என்ற கோஷம் எழுப்பப்படும்.
ஆனால், இந்த ஆண்டு முதலமைச்சருக்கு அரோகரா, அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என்றுகோஷம் போடுவது வரலாற்றிலேயே இதுவரைக்கும் இல்லாத வகையில் திருச்செந்தூரில் நடந்துள்ளது, எனக்கும் வயது 55 ஆகிவிட்டது, இதுவரைக்கும் அப்படி ஒரு கோஷம் போட்டதாகச் சரித்திரமே கிடையாது.
ஆகவே, ஒரு புதிய கலாச்சாரம் இந்த த.வெ.க ஆட்சியினரால் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வன்மையாக எல்லா பக்தர்களும் கண்டிக்கிறார்கள். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஆறு நாளும் விரதம் இருக்கும் பக்தகோடிகள், அந்த ஆலயத்தின் ஒவ்வொரு தூணிலும் இடம் கிடைப்பதற்கு அவ்வளவு சிரமப்படுவார்கள். ஒருத்தர் ஆறு நாளும் அங்கேயே, எத்தனை பெரிய கோடீஸ்வரர்களாக இருந்தாலும், தொழிலதிபர்களாக இருந்தாலும், அந்தத் தூணை ஒட்டி அமர்ந்து ஆறு நாளும் விரதம் இருந்து, முருகனுடைய அருளைப் பெற வேண்டும் என்பதற்காக, அவ்வளவு பக்தியுடன் இருப்பார்கள்.
சூரசம்ஹாரத்துக்குப் பின்புதான் அவர்கள் உணவு உண்பார்கள். அப்படி ஒரு பக்தி. கோடிக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையுடன் வருகின்ற இடம் அந்த இடம். அந்த இடத்தில் இப்படி ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பக்த கோடிகள் அனைவரும் முகம் சுளித்தார்கள். ஏனென்றால், இறைவனுக்குச் சமமாகத் தங்களுடைய கட்சித் தலைவரையும் அமைச்சரையும் பேசுவது என்பது அபத்தமானது. நிச்சயமாக இது ஆணவத்தின் உச்சம். இதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக, இந்நிகழ்வில் யாருக்கும் வாகன அனுமதி பாஸ் கூட வழங்கவில்லை. இதுவரை வழங்கப்பட்டு வந்த பாஸ் இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. இதனால், நிறைய பக்தர்களால் உள்ளே நுழையக்கூட முடியவில்லை.
ஏன், முன்னாள் ஆளுநரான தமிழிசை அவர்களும் உள்ளே நுழைய முடியவில்லை. ஆனால், த.வெ.க கட்சிக்காரர்கள் அனைவரும் உள்ளே இருந்தார்கள். அப்படியென்றால் உங்க கட்சிக்கார்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா?
நீங்கள் பக்த கோடிகளுக்கு ஒரு துளி கூட மரியாதை வழங்கவில்லை. இது அபத்தமான செயல். எல்லோராலும் வணங்கப்படுகிற இந்தத் திருச்செந்தூர் முருகனுடைய சன்னிதானத்தில் நடப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நிச்சயமாக இது ஆணவத்தின் உச்சம். அழிவு நிச்சயம்.
“அரோகரா முதலமைச்சருக்கு” என்று சொன்னவர் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கு தவறு நடந்தது? ஏன் இந்த முறை பாஸ் கொடுக்கவில்லை? ஏன் இந்தக் கோஷம் எழுப்பப்பட்டது? என்பது குறித்து அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
Also Read
-
“காவல்நிலையங்களே அச்சுறுத்தலாவதா? மனித உரிமை என்னாயிற்று?” : ஆசிரியர் கி.வீரமணி கேள்வி!
-
“மேகதாது என்பது படமல்ல; கோடிக்கணக்கான தமிழ்மக்களின் வாழ்வாதாரம்!” : முரசொலி தலையங்கம் அறிவுறுத்தல்!
-
வெட்கமில்லாமல்... : சோனியாகாந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விஜய்க்கு அப்பாவு கண்டனம்!
-
சூரசம்ஹாரம் : “இதுதான் திராவிட மாடலுக்கும் ரீல்ஸ் மாடலாக உள்ள வித்தியாசம்” - சேகர்பாபு தாக்கு!
-
எந்தக் கொம்பனாலும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது; விஜய் அமைதி காப்பது ஆபத்து : துரைமுருகன் அதிரடி பேட்டி!