Politics
இது ரியல் ஆட்சி அல்ல… ரீல்ஸ் ஆட்சி… த.வெ.க அரசுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி மதிப்பெண்!
‘The South First’ என்ற ஆங்கில மின்னூல், தமிழகம் முழுவதும் 18 முதல் 65 வயது வரையிலானவர்களிடம் நவம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் 10 கேள்விகள் மூலம் கருத்துகள் சேகரித்தது.
தவெக அரசின் 6 மாத ஒட்டுமொத்த செயல்பாடுகள் குறித்து, 54.2 சதவீதம் பேர், ‘’மிகவும் மோசம்’’ என்றும் 13.7 சதவீதம் பேர், ‘’மோசம்’’ என்றும் மதிப்பிட்டுள்ளனர். அதாவது, மொத்தம் 67.9 சதவீதம் பேர், த.வெ.க அரசுக்கு எதிராக கருத்து சொல்லி இருக்கிறார்கள்.
மே 10 ஆம் தேதி, த.வெ.க அரசு பொறுப்பேற்ற பிறகு மொத்தம் 56.5 சதவீதம் பேர், விஜய் மீதான தங்களது பார்வை மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். அவர் சரியில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.
ஊழலற்ற நிர்வாகத்தையும் தூய்மையான ஆட்சியையும் வழங்குவதாகத் தேர்தலின் போது, த.வெ.க அளித்த வாக்குறுதி குறித்தும் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில் பங்கேற்றவர்களில் 60.5 சதவீதம் பேர், கொடுத்த வாக்குறுதியைத் நிறைவேற்றத் தவறி விட்டதாகக் கருத்து தெரிவிதுள்ளார்கள்.
பெண்கள் பாதுகாப்பு கடந்த 6 மாதங்களில் மேம்பட்டுள்ளதா? என்றக் கேள்விக்கு 62.3 சதவிகிதம் பேர், நிலைமை மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, கொலைச் சம்பவங்கள், குற்றங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றை த.வெ.க அரசு கையாளும் விதம் குறித்தும் The South First கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
இதில் பங்கேற்றவர்களில் 57.7 சதவீதம் பேர் அரசின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது என்றும் 15.4 சதவீதம் பேர் சிறப்பாக செயல்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஆக, சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று 73.1 சதவீதம் பேர் தெரிவித்துள்ளார்கள்.
மக்களின் அன்றாடப் பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரச் சிக்கல்களை கையாள்வது குறித்து, 37.7 சதவிதம் பேர் அரசின் செயல்பாடுகள் மீது அதிருப்தியும் மேலும், 37.7 சதவிதம் பேர் மிகவும் அதிருப்தி என்றும் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 75.4 சதவிதம் பேர் அதிருப்தி தெரிவித்து இருக்கிறார்கள்.
தேர்தலுக்கு முன்பு மக்களிடம் உருவாக்கிய எதிர்பார்ப்புகளை ஆட்சிக்கு வந்த பிறகு த.வெ.க அரசு நிறைவேற்றியுள்ளதா? என்றக் கேள்விக்கும் The South First கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. 63.8 சதவீதம் பேர், ‘’மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற த.வெ.க அரசு தவறி விட்டது’’ என்று குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.
இனியும் இந்த அரசு தேர்தல் வக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இல்லை என்று 71.3 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.
இது ரியல் ஆட்சி அல்ல.. ரீல்ஸ் ஆட்சி என்பது கருத்துக்கணிப்பில் உறுதியாகியிருக்கிறது.
Also Read
-
“இவரது தீர்ப்பால்தான் மணிப்பூர் கலவரமே வெடித்தது.. அப்படிப்பட்டவரை நியமிப்பதா?”- தவெக-வுக்கு CPI கண்டனம்!
-
“மாணவர்களை கல்வி உதவிக்காக இப்படி கெஞ்சவிடுவது நியாயமா?” : த.வெ.க அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி கண்டனம்!
-
“பில் வரவில்லை - மெயில் வரவில்லை என்று கல்வியை முடக்காதீர்கள்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!
-
விலைவாசி உயர்வில் முதலிடம்... மக்களை காக்கத் தவறிய த.வெ.க அரசு!
-
“இப்படி மாணவர்களை வதைத்தால்... எப்படி உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்?” : தி.மு.க தலைவர் கண்டனம்!