Politics
தவெக MLA-க்கள் கூட்டத்தில் தீபாவளி பரிசா? நடவடிக்கை எப்போது? எதற்கு இந்த நாடகம்? : திமுக சரமாரி கேள்வி!
தவெக-வின் அவல ஆட்சி 6 மாத காலத்தை கடந்துள்ள நிலையில், கொலைகள், கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
இந்நிலையில் துறையூர் தவெக எம்.எல்.ஏ-வும் துணை சபாநாயகருமான “இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா?” : விஜய்யின் தீபாவளிப் பரிசுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்! தொகுதி பிரச்சனையைக் கூற வந்த கார்த்திக் என்ற நபரை ஆபாச வார்த்தைகளால் பேசி, கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், அம்மாவட்டத்தின் பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. ஆனால், தற்போது வரை இந்த இரு எம்.எல்.ஏ-க்கள் மீதும் தவெக தலைவர் விஜய் கட்சி ரீதியாகவோ, முதலமைச்சர் என்கிற முறையில் சட்ட ரீதியாகவோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்படி எம்.எல்.ஏ-க்களே தாகத செயல்களில் ஈடுபட்டுவரும் நிலையில் தவெக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடந்தது. ஆனால், அங்கு பத்திரிகையாளர்கள் உள்ளேயே அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் கூடுதல் தகவலே. அந்தளவுக்கு வெளிப்படைத்தன்மையை கடைபிடித்தார்கள். சரி கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடந்ததே குற்றம்சாட்டப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தாலும், வந்த செய்தியோ வழக்கம்போல அது நடந்தது, இது நடந்தது என தகவல்களாகவே வந்தன.
முக்கியமாக எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் விஜய் தீபாவளி பட்டு வேஷ்டி, சட்டையும், பட்டுப்புடவைகளும் பரிசளித்தார் என செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம், தவெக-வின் துணை சபாநாயகர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் சிக்கி உள்ள நிலையில், மாமல்லபுரத்தில் விஜய்யின் ஆலோசனை கூட்டம் நடந்த இன்டர்நேஷனல் ஹோட்டலில் தகரம் வைத்து தடுப்புகள் அமைத்ததும், தப்பு செய்தவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று ஹைப் கொடுக்கப்பட்டது.
ஆனால், விஜய் எச்சரித்தார்.. விஜய் மிரட்டினார்.. என்பதை தவிர உருப்படியான நடவடிக்கை எதுவும் இல்லை. குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்எல்ஏக்களுக்கு பட்டு வேட்டி சட்டையுடன் வெயிட்டான தீபாவளி பரிசை கொடுத்து பாராட்டிய அனுப்பி இருக்கிறார் விஜய். இதை மறைக்கத்தான் தகரத்தால் தடுப்புகள் போடப்பட்டதா?
விஜய்யின் எச்சரிக்கையை சொந்த கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஒரு டேஷாகக் கூட மதிப்பதில்லை. பிறகு எதற்கு இந்த நாடகம்?
போலீஸ் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய், குற்றச்சாட்டுக்குள்ளான துணை சபாநாயகர் மற்றும் எம்.எல்.ஏ மீது FIR பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
விசாரணையை நேர்மையாக நடத்தும் வகையில், அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்?
அதிமுக எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்து தன் கட்சியில் சேர்த்துக் கொள்ளும் விஜய், குற்றச்சாட்டுக்கு உள்ளான தன் கட்சியின் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து விசாரணையை எதிர்கொள்ளச் செய்வாரா? என கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
6 மாத தவெக ஆட்சியில் 3-வது முறையாக குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு : தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா?” : விஜய்யின் தீபாவளிப் பரிசுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுத்திடுக.. டிஜிபி-யிடம் திமுக புகார் மனு!
-
பொதுமக்களைக் காக்க வேண்டிய போலீசாரும் அச்சத்தில் வாழ்கிறார்கள்! : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
தேவையற்ற காரணங்களைக் கூறி குரியன் குழு கலைப்பு! : த.வெ.க அரசுக்கு ‘தி இந்து’ நாளேடு கண்டனம்!