Politics

த.வெ.க எம்.எல்.ஏ.வின் சீண்டல்... மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை! : கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!

த.வெ.க.வின் கடந்த 6 மாதகால ஆட்சியில் நாள்தோறும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளை நிரூபிக்கும் குற்றங்கள், மக்களை அச்சுறுத்தும் வகையில் வெளிவந்துகொண்டே இருக்கின்றன.

குறிப்பாக, த.வெ.க ஆட்சியின் அலட்சியப் போக்கால், மக்களுக்கும் பாதுகாப்பில்லை, மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறைக்கும் பாதுகாப்பில்லை.

அதிலும், பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவது, த.வெ.க ஆட்சியாளர்களாகவே இருப்பது, மேலும் தமிழ்நாட்டை தலைகுனிய வைத்து வருகிறது. இவ்வித தலைகுனிவின் தொடர்ச்சியாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடமே பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ்.

இதனைக் கண்டித்து, தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பின்வருமாறு,

“கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.

இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்?

முதலமைச்சர் விஜய் அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?”

Also Read: “மாநில சுயாட்சிக்கு இழைக்கப்பட்டுள்ள பெரும் பின்னடைவு!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!