Politics

தீபாவளி நாளில் கொலைச் சம்பவங்கள்.. துக்க நாளான பண்டிகை நாள்!

தீபாவளி என்றாலே மகிழ்ச்சி, புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் எனக் கொண்டாட்டங்கள் நிறைந்திருக்க வேண்டும். ஆனால், த.வெ.க ஆட்சியில் தமிழகத்தில் தீபாவளி அன்று ரத்த வெள்ளம் கரைபுரண்டு ஓடி இருக்கிறது.

இளம் பெண், இளைஞர்கள், சிறுவர்கள், போலீஸ் அதிகாரி என்று பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளது தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தீபாவளி நாளில் இத்தகைய, மரண ஓலம் கேட்டிருப்பது, சட்டம் - ஒழுங்கு நிலை குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

திருச்சி சமயபுரம் அருகே 17 வயதுடைய ராகுல், விஷால் ஆகிய இரு சிறுவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆதே மாவட்டத்தில் புறத்தாக்குடியில் கிறிஸ்டோபர் என்ற ஐ.டி ஊழியர் கொல்லப்பட்டுள்ளார்.

கடலூரில் பீர் பாட்டிலால் குத்தி, பிரிதிவிராஜ் (வயது 26) கொலை செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஜாமீனில் வந்திருந்த விக்னேஷ் (வயது 23), கடலூர் கல்லல் அருகே நவீன் (26) ஆகியோர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

இவற்றையெல்லாம் விட அதிர்ச்சியளிக்கும் சம்பவம் தேனியில் நடந்துள்ளது. சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்தவர்களைத் கண்டித்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார் (வயது 56), அடித்தேக் கொல்லப்பட்டுள்ளார். காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத கொடுமை.

திருவள்ளூர் மாவட்டத்தில் 24 வயதான இளம்பெண் மேகலா, கத்தியால் குத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை வியாசர்பாடியில் தனுஷ் என்ற 18 வயது இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

’’சிறுவர்கள், இளம் பெண், இளைஞர்கள், போலீஸ் சிறப்பு எஸ்.ஐ..”என்று ஒரே நாளில் நடந்த கொலைகள் அனைத்தும் தனித்தனி குற்றச் செயல்களாக தெரியலாம். ஆனால், ஒரே நாளில் இத்தனை கொலைகள் நடந்திருப்பதை வெறும் தற்செயலான சம்பவங்களாக கடந்துச் செல்ல முடியுமா?

ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் த.வெ.க அரசுக்கு சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு என்பது அறிக்கைகளிலும் அறிவிப்புகளிலும் மட்டுமே இருக்கிறது. குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதில் காவல் துறையின் கண்காணிப்பு தோல்வியைத்தானே இந்தக் கொலைகள் எடுத்துக் காட்டுகிறது.

மக்களின் உயிரைப் பாதுகாப்பதே ஓர் அரசின் முதன்மையான கடமை. தீபாவளி அன்று தமிழ்நாட்டை ரத்தக் காடாக்கிய பல்வேறு கொலைகளுக்கும் த.வெ.க அரசு பொறுப்பேற்ற வேண்டும்.

தூக்கத்தில் இருக்கும் த.வெ.க அரசு..!

Also Read: “பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம்” : தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்!