Politics

YBM பாலாஜி இடங்களில் ED RAID.. கொள்ளைக் கும்பலுக்கும், தூய சக்திக்கும் என்ன தொடர்பு? : திமுக ஐடி விங்!

தொழிலதிபர் YBM பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. இவர் ஆளும் தவெக தரப்புக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக தவெக அமைச்சர்கள் சி.டி.ஆர் நிர்மல்குமார் மற்றும் அமைச்சர் செங்கோட்டையனுடன் இவர் இருக்கும் புகைப்படங்கள் பரவலாக பரவி வரும் நிலையில், இதுகுறித்து தற்போது வரை தவெக அமைச்சர்கள் எந்த மறுப்போ பதிலோ கூறவில்லை.

இதுகுறித்துப் திமுக தகவல் தொழில்நுட்ப அணி, 5,000 கோடி மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த கும்பலுக்கும், தவெகவின் 'தூய சக்தி' பிம்பத்துக்கும் என்ன தொடர்பு?

சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்.எல்.ஏ-க்களை அடைத்து அழைத்து வந்தது முதல், கரூர் துயர நிகழ்வு வரை கட்சியின் அனைத்து முக்கிய நகர்வுகளுக்கும் இந்த YBM நிறுவனத்தின் சொகுசுப் பேருந்துகளே பயன்படுத்தப்பட்டது தற்செயலானதா? பதவி அதிகாரத்தைக் கைப்பற்ற எம்.எல்.ஏ-க்களுக்கு 'சோஃபா' கொடுத்து உபசரித்ததன் பின்னணியில் இயங்கியது இந்த ஊழல் மாஃபியாதானா?

பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைச் சுருட்டிய கொள்ளைக் கும்பல்தான் தவெகவின் அன்றாட அரசியல் செலவுகளுக்கும், குதிரைப் பேரத்திற்கும் கறுப்புப் பணத்தை வாரி இறைத்ததா?

சொந்தக் கட்சியின் முக்கியப் பிரமுகர் அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கியிருக்கும் நிலையில், இதுகுறித்து நேரடியாகப் பதில் சொல்ல வக்கில்லாமல் 'டம்மி' முதலமைச்சர் திசைதிருப்பல் நாடகங்களை அரங்கேற்றுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது.

Also Read: ரூ.12-க்கு கேரளாவுக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க-வால் ஏன் முடியவில்லை? : மு.க.ஸ்டாலின் கேள்வி!