Politics

நாளை (நவ.4) கோவை வருகைதரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்! : பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் விவரம் உள்ளே!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை (நவ.4) கோவையில் நடைபெறும் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கு பாராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வருகை தருகிறார்.

முதலாவதாக, நாளை காலை 11 மணி அளவில் கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள லீ மெரிடியன் எதிரில் புதிய கோவை மாவட்ட தி.மு.க அலுவலகக் கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அதனைத் தொடர்ந்து. மாலை 5 மணி அளவில் கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெறும் தந்தை பெரியார் 148-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் ‘பெரியார் அறிவுலகம்’ கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டும் விழாவில் கலந்துகொண்டு, எற்புரை ஆற்ற இருக்கிறார்.

திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் நன்றி பாராட்டும் விழாவிற்கு, தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையேற்று நன்றி பாராட்டுரை வழங்க இருக்கிறார்.

இதில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள், மக்கள் என ஏராளமானோர் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர்.

Also Read: அசாமிலிருந்து கொண்டுவரப்பட்ட 5 யானைகள் : வெளிச்சத்திற்கு வந்த பா.ஜ.க - த.வெ.க-வின் ரகசியக் கூட்டு!