Politics
கையில் பனையூர் மூர்த்தி புகைப்பிடிப்பது.. First உங்க Tatoo-வ அழிச்சுட்டு வாங்க.. ஜெகதீஸ்வரிக்கு பதிலடி!
தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் சரி, இப்போதும் சரி தாங்கள் தான் இந்த உலகிலேயே உத்தமர் போல ஒரு பிம்பத்தை உருவாக்க பல்வேறு முனைப்புகளை காட்டி வருகிறது. வெறும் விஜயின் கவர்ச்சியை வைத்து மட்டுமே ஆட்சிக்கு வந்துள்ள தவெக, தொடர்ந்து பல கிரிமினல் குற்றங்களை செய்து வருகிறது.
குழந்தைகள் கடத்தல், சிறுமிகள் வன்கொடுமைகள், திருமணத்தை மீறிய தொடர்பு, கஞ்சா பதுக்கல், கொலை, கொள்ளை, ஊழல் என அடுத்தடுத்து எல்லா குற்றங்களிலும் கால் பதித்து வருகிறது. எனினும் தாங்கள் தான் நல்லவர்கள் போல வெளியில் பம்மாத்து காட்டி கொண்டு வருகிறது.
தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யாமல், வெறும் மேடைப்பேச்சிலேயே வழக்கம்போல் திமுகவை குறைகூறி இந்த 5 ஆண்டுகாலத்தையும் ஓட்டி விடலாம் என்றே கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் நடக்கும் ஒட்டுமொத்த குற்றச்செயல்களிலும் பெரும்பாலும் தவெக-வினரே இருந்து வரும் சூழலில், தனது கையில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற படத்தை பச்சைக் குத்திக்கொண்டுள்ள அமைச்சர் ஜெகதீஸ்வரி தற்போது மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
விருதுநகரில் அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தவெக அமைச்சர் ஜெகதீஸ்வரி, "மாணவர்கள் தப்பு தப்பாக முடி வெட்டி கொண்டு வந்தால் மொட்டை அடித்து விடுங்கள். ஒருவரது தோற்றம் தான் அவரது குணாதிசயத்தை தீர்மானிக்கிறது." என்று பேசினார். இவரது பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பலரும் இவரது பேச்சுக்கு கண்டனங்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வரும் நிலையில், திமுக IT Wing பதிவின் மூலம் பதிலடி கொடுத்துள்ளது. அந்த பதிவு வருமாறு :-
கையில் பனையூர் மூர்த்தி புகைப்பிடிப்பது போன்ற படத்தை பச்சைக் குத்திக்கொண்டு பெருமையாக ஊர் சுற்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு, மாணவர்களின் ஒழுக்கத்தைப் பற்றிப் பேச என்ன தார்மீகத் தகுதி இருக்கிறது?
மாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்க வேண்டிய பள்ளிக்கூடங்களில், அவர்களின் பிஞ்சு மனதையும் தோற்றத்தையும் சிதைக்கச் சொல்ல உங்களுக்கு என்ன தார்மீகத் தகுதி இருக்கிறது?
ஊருக்கு உபதேசம் செய்யும் முன், உங்கள் கையில் உள்ள டாட்டூவை அழித்துவிட்டு வாருங்கள் அமைச்சரே!
Also Read
-
“மொட்டை அடிச்சுருங்க.. ஒருவரது தோற்றம்தான்..” - பள்ளியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி சர்ச்சை பேச்சு!
-
பாசிசத்திற்கு வாலாட்டும் ராஜவிசுவாசம்! : த.வெ.க.வின் இரட்டை நிலைப்பாட்டிற்கு ஆ.ராசா எம்.பி கண்டனம்!
-
“நவம்பர் 15-க்கு மேல்... தமிழ்நாட்டை நோக்கி வரும் புயல்!” : வி.என்.துரை எச்சரிக்கை!
-
“தலைகீழாக மாறும் தமிழ்நாட்டின் பொருளாதாரம் !” : வரி வருவாய் சரிவுக்கு, டி.ஆர்.பி.ராஜா கண்டனம்!
-
ஒரே நாளில் இரண்டு சிறப்புத் தகுதித் தேர்வுகளா..? ஆசிரியர்களை சோதிக்கும் த.வெ.க அரசு!