Politics

“Lawlessness-ன் அடையாளமாக தவெக ஆட்சி.. மூடர் கூட்டத்தின் ஆட்சி” : உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது எனபதற்கு சாட்சியாகவே தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் சம்பவம் மக்களை பதைபதைக்க வைத்து வருகிறது.

இப்போது புதுவிதமாக சிறைக்கைதிகளும் சிறையிலிருந்து தப்பித்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த 5 மாதத்தில் மட்டும் 50 சிறைக்கைதிகள் தமிழ்நாட்டு சிறையிலிருந்து தப்பித்தது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடும் அளவுக்கு சீர்கெட்டு போய் இருக்கும் இந்த மூடர் கூட்ட ஆட்சியை வன்மையாக கண்டிக்கிறேன்.

சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு அந்த 17 கைதிகளும் தப்பி இருக்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சிறைத்துறை எந்த அளவுக்கு சீரழிந்து போயுள்ளது என்ற கேள்வி எழுகிறது?

சமீபத்தில் புழல் மத்திய சிறைக்கு ஆய்வுக்குப் போன முதலமைச்சர், அதனடிப்படையில் எடுத்த நடவடிக்கை என்ன?

தமிழ்நாடெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஏதேனும் உத்தரவுகளை பிறப்பித்தாரா?

ஒரு பக்கம் குழந்தைகள் வீட்டிலிருந்து மாயம் - மறுபக்கம் கைதிகள் சிறையில் இருந்து ஓட்டம் என்று Lawlessness-ன் அடையாளமாக ஆட்சி நடத்துவது தான் இந்த dummy முதலமைச்சரின் சாதனை.

தப்பித்த கைதிகள் அனைவரையும் உடனே பிடிப்பதோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும் என்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன், என பதிவிட்டுள்ளார்.

Also Read: “1995-க்குப் பிறகு தவெக அரசில்.. Breaking Bad-ஐ தொடர்ந்து Prison Break” : மு.க.ஸ்டாலின் காட்டம்!