Politics

நாளுக்கு நாள் சீரழியும் சட்டம் ஒழுங்கு.. தாய்மாமா விஜய் எங்கே போனார், என்ன ஆனார்?: கனிமொழி எம்.பி கேள்வி!

தமிழ்நாட்டில் தினந்தோறும் நிகழும் கொலைச் சம்பவங்கள், குழந்தைக் கடத்தல், பாலியல் வன்கொடுமை ஆகியவற்றால் மக்கள் கொதித்துப் போயும் அச்சத்திலும் உள்ளனர்.

இதுகுறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தனது எக்ஸ் தள பதிவில், திருவைகுண்டம் அருகே கல்லூரி மாணவர் இசக்கி ராஜா வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சாத்தான்குளம் படுகொலைச் சம்பவத்தின் ரத்தம் காய்வதற்குள் தூத்துக்குடியில் அடுத்தப் படுகொலை நடந்திருக்கிறது.

கடந்த வாரத்தில் மட்டும் 5 படுகொலைகளுக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்திருக்கின்றன. அரிவாள் வெட்டு, சிறுமிகள் கடத்தல் என தூத்துக்குடியில் நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துகொண்டிருக்கிறது.

சரிந்துபோயிருக்கும் சட்டம்-ஒழுங்கின் நிலையை தினமும் சுட்டிக்காட்டினாலும் சுரணையற்றுச் சுணக்கம் காட்டும் தவெக அரசு, மக்களின் பாதுகாப்போடு விளையாடுவதை நிறுத்த வேண்டும்; உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (அக்.26) செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி அவர்கள், சென்னை எண்ணூர் அருகே, தவெக நிர்வாகி தேசிங்கு என்பவரால் இரண்டரை வயது குழந்தை பாலி*ல் வன்கொ*மைக்கு ஆளாக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. குற்றவாளி ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், இந்த விவகாரத்தை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். குழந்தையைக் காப்பாற்ற எந்த முயற்சியையும் இந்த அரசு செய்யவில்லை.

“தவெக பொறுப்பேற்ற ஐந்து மாதங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன. யாருமே பார்த்திராத அளவிற்கு 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. விஜய், ‘தாய்மாமன் சீர்வரிசை தருவேன்’ எனச் சொன்னார். ஆனால், இப்போது தாய்மாமன் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. விஜய் ஆட்சியில் தமிழகமே திக் திக் என்றுதான் உள்ளது! என தெரிவித்தார்.

Also Read: “அடுத்தடுத்து மாயமாகும் குழந்தைகள்.. எங்கே போனார் விஜய் மாமா?” : கனிமொழி எம்.பி சுளீர் கேள்வி!