Politics

போ*ப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்பவே இந்த கைது! : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

டெல்லியில் தனக்கு எதிராக யார் பேசினாலும், கருத்தியலுக்கு முரண்பட்டு யார் செயல்பட்டாலும், அவர்களை கைது செய்து வஞ்சிப்பதை கடந்த 11 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இந்த வல்லாதிக்க நடவடிக்கைகளால், பா.ஜ.க.வை தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இந்நிலையில், கருத்தியல் எதிரி பா.ஜ.க என பொதுவெளியில் சத்தமே இல்லாமல் பேசிவிட்டு, பா.ஜ.க.வின் கைப்பாவையாக செயல்படும் த.வெ.க.வும் வல்லாதிக்க கைது நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது.

அவ்வகையில், தாராபுரம் இடைத்தேர்தலில், நா.த.க சார்பில் போட்டியிட்ட கார்த்திகா என்பவரை கைது செய்துள்ளது த.வெ.க அரசின் காவல்துறை.

இதனைக் கண்டித்து, தி.மு.க இளைஞர் அணிச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டப் பதிவு பின்வருமாறு,

“தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சகோதரி கார்த்திகாவை இந்த Circus அரசாங்கம் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், அரசியல் பழிவாங்கலோடும் - த.வெ.க.வினரின் போதைப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்பவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசியலில் விமர்சனங்களும் - ஜனநாயக ரீதியான போராட்டங்களும் தவிர்க்க முடியாதவை. அதற்காக எதிர் வரிசையில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்வது என்பது கடைந்தெடுத்த பாசிசம்.

இந்த ரீல்ஸ் முதலமைச்சர், பா.ஜ.க-வின் Carbon Copy-ஆக செயல்படாமல், சகோதரி கார்த்திகாவை விடுவிக்கத் தேவையான நடவடிக்கையை செய்ய வேண்டும்.”

Also Read: “சமூகப் பிணி களையப் பெரியாரியத்தைத் தொடர்ந்து பரப்புவோம்!” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!