Politics

“சமூகப் பிணி களையப் பெரியாரியத்தைத் தொடர்ந்து பரப்புவோம்!” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை இன்று (அக்.20) நேரில் சந்தித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

இது குறித்து தி.மு.க தலைவர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டப் பதிவு பின்வருமாறு,

“ஆசிரியர் அய்யா அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்வியுற்றதும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.

அடிக்கடி தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்வதையும், ஓய்வில்லாமல் உழைப்பதையும் குறைத்துக் கொள்ள வேண்டுமென உரிமையோடு அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

"ஆக்ஸ்போர்டில் தந்தை பெரியாரின் படத்தைத் திறந்து வைத்து உலக அளவில் பெரியாரியத்தை நிலைநிறுத்தியது போன்றே, திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் கோவைக்கே புதிய அடையாளமாக நிலைக்கும்" என நிறைவோடு வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

சமூகப் பிணி களையப் பெரியாரியத்தைத் தொடர்ந்து பரப்புவோம்!”

Also Read: “அநீதியின் உச்சம்” : பிரதமர் இல்லம் அருகிலுள்ள பள்ளிவாசலை அகற்றும் முயற்சிக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!