Politics
கோவை முதல் திருப்பூர் வரை சாலைகளின் இருபுறமும் தடுப்புகள்! - முதலமைச்சர் விஜய் வருகையால் மக்கள் அவதி!
தமிழ்நாட்டில் விஜய்க்கு முன்பு 16 முதலமைச்சர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் யாரும் செய்திடாத ஆடம்பர ஆட்சியை 17ஆவது முதலமைச்சரான விஜய் மேற்கொண்டு வருகிறார்.
1930-களில் மேட்டூர் அணையை கட்டுவதற்கு ஆன செலவைவிட, 2026-ஆம் ஆண்டில் மேட்டூர் அணையை திறப்பதற்காக முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட பயணச்செலவு அதிகம்.
எங்கு சென்றாலும் தனி விமானம், இங்கிலாந்து சென்றால்கூட தனி விமானம்தான். லண்டனிற்கு 7 நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு, 5 நாட்கள் என்ன செய்தார் என்பது இன்றளவும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதில் இருந்து... அது ஏன் பதவியேற்றது முதல் இதுவரை பத்திரிகையாளர்களை சந்திக்காத முதலமைச்சர் என்ற போட்டியில், குஜராத்தின் முதலமைச்சராக இருந்த இன்றைய பிரதமர் மோடியையும் முந்தி நிற்கிறார் விஜய்.
இப்படியான நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க எங்கு சென்றாலும், வழி நெடுகிலும் தடுப்புகளை அமைத்து, ஆடம்பரத்தை வெளிப்படுத்துவதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் யாரும் நெருங்கிட முடியாத முதலமைச்சராக விஜய் இயங்கி வருகிறார்.
குறிப்பாக, மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக சாலைதோறும் தடுப்புகளை அமைத்து, மக்களை திக்குமுக்காடச் செய்த முதலமைச்சர் விஜய்; இன்று (செப்.30) திருப்பூரில் உள்ள தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தருவதற்காக, கோவை விமான நிலையம் முதல் தாராபுரம் வரை தடுப்புகளை அமைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளார்.
ஆட்சி அமைத்து 4 மாதங்களுக்குள்ளாகவே, மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் ஆடம்பரத்தை கட்டவிழ்த்துவிடும் முதலமைச்சர் விஜய், இனிவரும் காலங்களில் எப்படியான ஆடம்பரத்தை வெளிப்படுத்துவார் என்று கேள்விகளை எழுப்பி மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
இனி இந்த அரசு ‘தமிழக வாபஸ் கழக அரசு’ என்று அழைக்கப்படும்! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
“ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் கி.வீரமணி பேச்சு!
-
“மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது” : த.வெ.க அரசுக்கு CPM எதிர்ப்பு!
-
“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?
-
‘டோரதி’ – திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!