Politics
பல்லிளிக்கும் தவெக அரசு.. அமைச்சர் நிர்மல்குமார் நிகழ்வில் மின் தடை.. அமைச்சர், மின்துறை இரட்டை விளக்கம்!
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பிறகு கடந்த 4 மாத காலமாக மின் தடையால் மக்கள் கடுமையாக அவதியுற்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட மின்வெட்டு ஏற்படுவதை காண முடிகிறது. அந்தளவுக்கு இந்த ஆட்சியின் கையாலகாத நிர்வாகத் திறமையின்மையால் மின் துறை சீரழிவிற்குள்ளாகியுள்ளது என்பதே உண்மை என மக்களே கூறுகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் இதுபோன்ற ஒரு சூழ்நிலையே வரவில்லையே ஆனால், இப்போது ஏற்படும் மின்வெட்டுக்கு காரணம் என்ன? ஏன் துறை சார்ந்த அமைச்சர் பஞ்சாப்பையும் மற்ற மாநிலங்களையும் ஒப்பிட்டு காரணத்தை தேடிக்கொண்டிருக்கிறார் என மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று (செப்.26) மதுரை சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நீதிபதி ஜெகதீஸ் சந்திரா பேசிக் கொண்டிருக்கும்போதே மின்வெட்டு ஏற்பட்டது அனைவரையுமே அதிர்ச்சியடைய வைத்தது. காரணம் தவெக ஆட்சியில் மின்வெட்டு இல்லை என்றால் தான் ஆச்சரியம் எனக் கேட்கலாம். ஆனால் அதுவல்ல மேடையில் மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமாரும் அமர்ந்து கொண்டுள்ளார். ஆனாலும் மின்வெட்டு.
இதற்கான விளக்கத்தை அமைச்சர் நிர்மல்குமாரும், மின் துறையும் அளித்ததுதான் கூடுதல் சுவாரசியம். இந்த மின்வெட்டுக்கு காரணம், விழா ஜெனரேட்டரில் இயங்கியது. அதனை மாற்றும்போது 5 விநாடி தான் மின்வெட்டு ஏற்பட்டது மீண்டும் மின்சாரம் வந்துவிட்டது என விளக்கம் தருகிறார்.
ஆனால், இந்த மின்வெட்டுக்கு காரணம் “ஒத்தக்கடை துணைமின் நிலையத்தில் உள்ள 110 KV அழகர்கோவில் - பசுமலை மின்பாதையில் (110 KV Alagarkoil -Pasumalai Feeder) இன்று காலை 11:22 மணியளவில் மின்பாதை துண்டிக்கப்பட்டதன் (jumper cut) காரணமாக மின்பாதை பழுதடைந்து மின்தடை ஏற்பட்டுள்ளது. தற்போது பழுது நீக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன; இன்னும் தோராயமாக 2 மணி நேரத்தில் மின்விநியோகம் சீரமைக்கப்படும்.” என வேறொரு விளக்கத்தைக் கொடுத்துவிட்டு அந்தப்பதிவை நீக்கியும் உள்ளது.
மின்சாரத்துறை மின்வெட்டுக்கான நியாயமான காரணத்தை மக்களுக்கு தெரிவிப்பதை விட்டுவிட்டு ஆளும் அரசுக்கும் அமைச்சருக்கும் அடிவருடியாக செயல்படுவதா? மின்சாரத்துறையா? ஆளும் அரசுக்கு முட்டுக்கொடுக்கும் துறையா? என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
தவெக ஆட்சியில் மின்வெட்டு, ஆவின் பால் விநியோகம் இல்லை, தண்ணீர் இல்லை என மக்கள் அன்றாடம் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், எந்தவொரு கவலையும் இல்லாமல் ஆட்சியாளர்கள் இருப்பதற்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டுதான் என கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
“நீங்கள் Failed ஹீரோ, Failed முதலமைச்சர்” : விஜய் பேச்சுக்கு தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் பதிலடி!
-
ஆய்வு, ஆராய்ச்சி என்ற பெயரால் படுகுழிக்கு பல்லாக்கு தூக்குவதா? : முரசொலி தலையங்கம் சாடல்!
-
“பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்... தரம் தாழ்ந்து பேசுவதா?”: சிஎம் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஜெம் வீரமணி வழக்கை முடிவுக்கு கொண்டுவர வாதிட்டது த.வெ.க அரசுதான்!” : தி.மு.க எம்.பி பி.வில்சன் தகவல்!
-
பள்ளி வளாகத்திலேயே பெண் குழந்தைக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருக்கிறது : தமிழச்சி தங்கபாண்டியன் MP!