Politics
செப்.19 அன்று தி.மு.க முப்பெரும் விழா நடைபெறும்! : தி.மு.க தலைமைக் கழகம் அறிவிப்பு!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் செப்.15 அன்று நடைபெற இருந்த தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வருகிற செப்.19 அன்று நடைபெறும் என தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணா ஆகியோர் பிறந்தநாளையும்;
தமிழினத்தின் விடிவெள்ளியாக உதித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க நாளையும் இணைத்து கழக முப்பெரும் விழாவாக கொண்டாட வேண்டும் என்று 1985-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்.
அன்று முதல் இன்று வரை தொடர்ந்து ஆண்டுதோறும் தி.மு.க சார்பில் முப்பெரும் விழா மிகச்சிறப்புடன் நடந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும், வெவ்வேறு மாவட்டங்களில் நடைபெறும் இந்த முப்பெரும் விழா, நடப்பாண்டில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வருகிற செப்.19 அன்று நடைபெற இருக்கிறது.
இதில் கலந்துகொண்டு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். கழக முன்னணியினரும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
Also Read
-
‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்! : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு!
-
வாபஸ் பெற்ற வழக்கு தான் சர்க்காரியா கமிஷன் வரலாறு; இதனை விஜய் அறியமாட்டார்! - முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“லண்டன் போய் முதலீடு ஈர்த்த லட்சணம் என்னன்னு தெரிஞ்சு போச்சு..” - விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.எஸ்.பாரதி!
-
ரெய்டு மற்றுமொரு திசைதிருப்பும் அரசியல் : த.வெ.க அரசுக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
3 நாள் விடுமுறை - கூடுதல் பேருந்துகளை விட வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத சேடிஸ்ட் த.வெ.க அரசு!